Wednesday, April 18, 2018

அல்லாஹ்வின் கருணை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

அல்லாஹ்வின் கருணை இல்லாமல் எந்த ஒரு மனிதனும் சொர்க்கம் செல்ல முடியாது. அவனுடைய கருணை என்பது ஒரு தாய் தன் குழந்தைக்கு காட்டும் பாசத்தை விட 99  மடங்கு கூடுதலாகும்.

நன்மையான  காரியம் 
“(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் 
(அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்”
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : புகாரி 

 அர்ஷின் நிழல்
“(தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு பேருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்.). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

அல்லாஹ்வின் அன்பு
(ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள்). குழந்தை கிடைக்கவில்லை. எனவே), கைதிகளில் எந்தக் குழந்தையைக் கண்டாலும், அதை (வாரி) எடுத்து(ப் பாலூட்டினாள். தன் குழந்தை கிடைத்தவுடன் அதை எடுத்து)த் தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது ‘எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், ‘இந்தப் பெண் தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள்!’ என்றார்கள். நாங்கள், ‘இல்லை, எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது’ என்று சொன்னோம். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பைவிட அல்லாஹ் தன் அடியார்களின் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :உமர் இப்னு கத்தாப் (ரலி), ஆதாரம் : புகாரி. 

அல்லாஹ்வின் கருணை 
இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.(அல்-குர்ஆன்  4:25).
'..அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், பெரும் கருணையாளனாகவும் இருக்கின்றான். (
அல்-குர்ஆன் 5:74).
'என் அடியார்களே!. (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்: மிக்க கருணையுடையவன்' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.' (அல்-குர்ஆன் 39:53)
ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்: (வேதனை வந்து விட்;டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். (அல்-குர்ஆன்39:54)
நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும்முன்னரே, உங்கள் இறவைனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றை பின்பற்றுங்கள். (அல்-குர்ஆன்39:55)

விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்பவர்கள்!
“என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : புகாரி
 
பொறுமையாக இருப்பவர்களுக்கு பிரதிபலன் சொர்க்கம்: 
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்”.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
 
நரகம் தடை செய்யப்படக் காரணமான வார்த்தை: 
இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். “(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை”‘ என்று கூறினார்கள்.
 
அறிவிப்பாளர்: முஹ்மூத் இப்னு ரபீஉ (ரலி), ஆதாரம் : புகாரி 
 
நரகவாசிகளின் மீது கருணை
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள்நரகத்திலும் நுழைவார்கள்பின்னர் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருப்பவரை(நரகத்திலிருந்துவெளியேற்றி விடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுவான்உடனேஅவர்கள் கறுத்தவர்களாகஅதிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹயாத் என்ற ஆற்றில்போடப்படுவார்கள்.இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான மாலிக்ஆற்றின் பெயர்ஹயா என்று சந்தேகப்படுகிறார்அவ்வாறு அவர்கள் இந்த ஆற்றில்போடப்பட்டதும் பெறும்வெள்ளம் பாயும் ஓடைக் கரையில் விதைகள்முளைப்பது போலப் பொலிவடைவார்கள்அவைவளைந்து மஞ்சள் நிறமாகஇருப்பதை நீர் பார்த்ததில்லையாஎன்று நபி (ஸல்அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி)-(புகாரி-22 )

அவர்கள் செய்தவற்றில் மிகத் தீயவற்றையும் அவர்களை விட்டும் அல்லாஹ்விலக்கி,அவர்களுடைய (நற்காரியங்களுக்குரியகூலியை அவர்கள் செய்துகொண்டிருந்ததை விட மிக்கஅழகியதைக் கொண்டு அவர்களுக்குக்கொடுப்பான்(அல்குர்ஆன்: 39:35)

Monday, November 5, 2012

அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது!!!


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....

அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..
அல்லாஹுத்தஆலாவின் திருப்பொருத்தமே எல்லாவற்றையும் விட மேலானது!!!

நிச்சயமாக அல்லாஹ், சுவர்க்கவாசிகளை நோக்கி, சுவர்க்கவாசிகளே! என்றழைப்பான். அதற்கவர்கள், லப்பைக வஸஃதைக வல்கைரு பியதைக எங்கள் இரட்சகனே!(இதோ)உன் சமுகத்தில்(நாங்கள்) ஆஜராகிவிட்டோம். அனைத்து நன்மைகளும் உன்னுடைய கரங்களிலேயே இருக்கிறது. என்று கூறுவார்கள்.

பின்னர், அல்லாஹுத்தஆலா அவர்களிடம் உங்களுக்குத் திருப்திதானே! என்று கேட்பான். அதற்கவர்கள், எங்களுடைய இரட்சகனே! நாங்கள் எப்படி திருப்தியடையாமல் இருப்போம்! நிச்சயமாக நீ உன் படைப்புகளில் எவருக்கும் கொடுக்காத அருட்கொடைகளையும் நற்பாக்கியங்களையும் எங்களுக்குக் கொடுத்து விட்டாய் என்று கூறுவர்.

அப்பொழுது, அல்லாஹுத்தஆலா அதை விட மிக மேலான ஒன்றை நான் உங்களுக்குத் தரட்டுமா? என்று கேட்பான். அதற்கவர்கள், அதைவிட மேலான பொருள் என்ன? என்று (ஆச்சரியத்துடன்) கேட்பார்கள். அதற்கு அல்லாஹுத்தஆலா, நான் உங்களின் மீது ரிள்வான் எனும் என்னுடைய திருப்பொருத்தத்தை இறக்கிவைக்கிறேன் (அதுவே எல்லாவற்றையும் விட மிக மேலானது) அதற்குப் பிறகு ஒரு பொழுதும் நான் உங்களிடம் கோபிக்கமாட்டேன் என்று கூறுவான்.
புகாரி, முஸ்லிம்: அபூ ஸயீதில் குத்ரீ(ரலி)

Tuesday, July 3, 2012

தாய்ப்பாலூட்டல் இஸ்லாமிய ஷரீஅத்தும் நவீன ஆய்வுகளும்



  எஸ்.எம்.எம் மஸாஹிர், நளீமி 
ஒரு குழந்தை பிறந்ததும் அதற்குத் தாய்ப்பாலூட்டுவது தொடர்பாக அதன் தாய் கொண்டிருக்கும் கருத்து மிகவும் செல்வாக்கு மிக்கதானதாகும். அக்கருத்தின் அடிப்படையில்தான் அப் பிள்ளையின் உடல், உள, அறிவு வளர்ச்சியும் சிலபோது அதன் முழு வாழ்வும் தங்கியுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம்கள் கொண்டிருக்க வேண்டிய சரியான கருத்தை இஸ்லாமிய ஷரீஅத்தினதும் நவீன அறிவியல் ஆய்வுகளினதும் நிழலில் இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.
ஒரு குழந்தைக்கு அதன் தாய்தான் மிகவும் நெருக்கமானவள். அவள்தான் அப்பிள்ளையின் மீது மிகவும் பாசமும் இரக்கமும் கொண்டவள். அவளது தாய்ப்பால்தான் எல்லா வித உணவு, பானங்களை விடவும் மிக உயர்ந்த உணவு என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும்.
குழந்தைக்குத் தாய்ப்பாலூட்டல் தொடர்பாக அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.
'(தங்களுடைய குழந்தைக்கு தம் மனைவிகளைக் கொண்டே) பால் ஊட்டுவதைப் பூர்த்தியாக்க விரும்புகிறவருக்காக, தாய்மார் கள், தங்களுடைய குழந்தைகளுக்கு (அவை பிறந்ததிலிருந்து) இரண்டு ஆண்டு வரை பூரணமாகப் பாலூட்டுவார்கள். இன்னும் (பாலூட்டும் இக்காலங்களில்) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி (வழங்குவது) தகப்பன் மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கேற்றவாறல்லாது (செய்யும்படியாக) சிரமப்படுத்தப்படமாட்டாது. ஒரு தாய் தன் குழந்தையின் காரணமாக, இன்னும் ஒரு தந்தை தன் குழந்தையின் காரணமாக துன்புறுத்தப்படமாட்டார். (குழந்தையின் தகப்பன் இறந்து விட்டால், அதனைப் பரிபாலிப்பது) இவ்வாறே வாரிசின் மீது (கடமை) இருக்கிறது. (குழந்தையின் தாய், தகப்பன்) இருவரும் சம்மதித்து, ஆலோசனை செய்து, (குழந்தையின்) பால்குடியை (இரண்டு ஆண்டுகளுக்குள்) மறக்கடிக்க நாடினால், (அவ்வாறு செய்வது) அவ்விருவர் மீதும் குற்றமல்ல. நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்கு, (செவிலித்தாயைக் கொண்டு) பாலூட்டவும் நாடினால், நீங்கள் கொடுக்க வேண்டியதை முறைப்படி ஒப்படைத்து விட்டால், உங்கள் மீது குற்றமாகாது. நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக் கூடியவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (சூறதுல் பகரா : 233)
மேலே குறிப்பிடப்பட்ட இறை வசனம் பின்வரும் அம்சங்களைத் தெளிவுபடுத்துகின்றது.
01. தனது குழந்தைக்கு போதுமான காலப்பகுதி வரை பாலூட்டுவது அதன் தாய் மீது கடமையாகும்.
02. ஒரு குழந்தைக்குப் பூரணமாகப் பாலூட்டுவதற்கான காலப்பகுதி இரண்டு வருடங்களாகும்.
03. குடும்ப வாழ்வில் ஈடுபட்டுள்ள தாய்க்கும், மீட்டி எடுத்துக் கொள்ள முடியுமான விவகாரத்துக்குரிய (தலாக் ரஜஈ) இத்தாவில் இருக்கும் தாய்க்கும் பாலூட்டுவதற்கென உணவு, உடைச் செலவினம் தனியாக வழங்கத் தேவையில்லை. இவ்விரு சந்தர்ப்பங்களிலும் சாதாரனமாக கணவன் அவள் மீது செலவழிக்கக் கடமை ப்பட்டுள்ளான். ஆனால், இத்தா முடிந்து விட்டாலோ, மீட்ட முடியாத விவாகரத்து (தலாக் பாயின்) மூலம் பிரிந்து விட்டாலோ அக்குழந்தைக்குப் பாலூட்டும்படி அதன் தாயை நிர்ப்பந்திக்க முடியாது. பாலூட்டுவதற்கு அவள் இணங்கினால் அவளுக்கு உணவு, உடைச் செலவினம் வழங்குவது தந்தை மீது கடமையாகும்.
04. விவாகரத்து செய்யப்பட்டு, இத்தாக் காலமும் முடிவடைந்த தாயைப் பொறுத்த மட்டில் இரண்டு நிலைமைகளில் அக் குந்தைக்கு பாலூட்டும் படி அவளை நிர்ப்பந்திக்கலாம்.
(அ) குழந்தை வேறு தாயிடம் பால் குடிப்பதற்கோ புட்டிப்பால் குடிப்பதற்கோ முற்றாக மறுப்புத் தெரிவித்தால்
(ஆ) தந்தையிடம் செவிலித் தாயைப் பெற்றுக் கொள்வதற்கான பண வசதியோ, குழந்தைக்கு செலவழிக்க அதற்குரிய சொத்தோ, வேறு உதவி செய்பவர்களோ இல்லாது இருந்தால்
05. குழந்தை தந்தையை இழந்து விட்டால் தந்தையின் சொத்தில் வாரிசுரிமை பெறுவோர் (தந்தையின் தந்தை, மூத்த சகோதரன், பெரிய தந்தை, சிறிய தந்தை போன்றோர்) அக்குழந்தைக்கான செலவினங்களைச் செய்யக் கடமைப்பட்டுள்ளனர்.
06. தாயும் தந்தையும் உடன்படும் சந்தர்ப்பத்தில் குழந்தைக்குத் தீங்கேதும் ஏற்படாது எனும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் பூரணமாக முன்பே பால்குடி மறக்கடிக்கலாம்.
07. தேவைப்படும் பட்சத்தில் செவிலித் தாய் ஒருவரைக் கூலிக்கமர்த்தலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் குழந்தையாக இருக்கும் போது ஹலீமா நாயகி செவிலித் தாயாக இருந்தார்கள்.
08. இவ்விவகாரங்களில் எல்லாம் அல்லாஹ்வைப் பயந்து நடந்து கொள்ள வேண்டும். அவன் அனைத்து விடயங்களையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணம் மேலோங்கி இருக்க வேண்டும். (கௌசர் முஹம்மத் அல் மீனாவீ, ஹுகூகுத் திப்ல் பில் இஸ்லாம், பப.36,37)
அல்லாஹ்தஆலா ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்ததிலிருந்து தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டி வந்துள்ளார்கள். சொந்தத் தாய்க்கு நோய், வேறு காரணங்கள் இருந்தால் செவிலித் தாயை கூலிக்கமர்த்தி, தாய்ப்பாலை அருந்தச் செய்துள்ளனர். இதன் மூலம் குழந்தைகள் பரம்பரை பரம்பரையாக சீரான வளர்ச்சியைப் பெற்று, வாழ்ந்து வந்துள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து செயற்கை பால்மா(புட்டிப்பால்) தோற்றம் பெற்றது. பால்மா உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பால்மாவை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தின. பல்வேறு பால்மா வகையறாக்கள் வெளிவந்தன. அவற்றை விற்பனை செய்வதற்காக கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தோன்றின. தாய்மார்களின் எண்ணங்களையும் சிந்தனையையும் அவை வசீகரித்தன.
குழந்தைக்குப் பாலூட்டுவதால் தாயின் அழகு குறைந்து விடும் எனவும், பாலியல் இன்பம் அருகிவிடும் எனவும் பொய்ப் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிழையான கருத்துக்களை உள்வாங்கிய தாய்மார்களுள் பெருந் தொகையானோர் தமது பாசக் குழந்தைகளுக்கென அல்லாஹ்வால் உருவாக்கித் தரப்பட்ட நிறையுணவைக் கொடுக்காது தடுத்துக் கொண்டனர். இதனால் மார்பகப் புற்று நோய் போன்ற நோய்களுக்கு அவர்களுள் கணிசமானோர் உட்பட்டனர்.
தமது குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மிக அரிதாகவே மார்பகப் புற்று நோய், கர்ப்பப்பைப் புற்று நோய் போன்ற பயங்கர நோய்களுக்கு உட்படுகின்றனர் என்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன
(தங்களுடைய குழந்தைகளுக்கு விவாகரத்துச் சொல்லப்பட்ட தன் மனைவியர்களைக் கொண்டே)பாலூட்டுவதைப் ©ர்த்தியாக்க (கணவர்) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டல் வேண்டும் (பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு உணவும், அவர்களுக்கு உடையும் முறைப்படி கொடுத்துவருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்.
எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமம் கொடுக்கப்படமாட்டாது. தாய் தன் குழந்தையின் காரணமாகவோ இன்னும் தந்தை தன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டார்; (குழந்தையின் தந்தை இறந்துவிட்டால் அவருடைய) வாரிசின் மீதும் அதேபோன்று (கடமை) இருக்கிறது. இன்னும், (தாய், தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமில்லை. (ஸூறா பகரா: 233)
தாய்ப்பாலூட்டல் தொடர்பாக நவீன ஆய்வுகள் எவ்வகையான முடிவுகளைத் தந்துள்ளன என்பதையும் அவை அல்-குர்ஆனின் கருத்துக்களோடு எவ்வாறு இணைத்து செல்கின்றன என்பதையும் நோக்குவோம்.
மனிதக் குழந்தைகளுக்கு வழங்கப்பட முடியுமான மிக ஆரோக்கியமான பால் வகை தாய்ப்பாலாகும். ((Picciano M (2001) "Nutrient composition of human milk", Pediatr clin North)) அதில் சில விதிவிலக்குகள் உண்டு. தாய் சில குறிப்பிட்ட மருந்து வகைகளைப் பாவிக்கும் போது அல்லது சயரோகத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அல்லது HIV வைரஸ் பீடித்திருந்தால் அத்தாயின் பால் பிள்ளைக்கு உகந்ததன்று. தாய்ப்பாலூட்டல் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும். நோயைத் தவிர்க்க உதவும்ளூ ஆரோக்கியத்துக்காக கவனம் செலுத்த வேண்டியதைக் குறைவடையச் செய்யும். பாலுக்கான செலவினைக் குறைக்கும். அபிவித்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடுகளில் செயற்கை பால்மாவினால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கின் காரணமாக அதிக மரணங்கள் ஏற்படுகின்றன. (Horton S.....(1996) "Breast Feeding Promotion and.....(1996) priority setting in health", Health policy plan)
தாய்ப்பாலில் உள்ளடங்கியுள்ள எல்லா குணாதிசயங்களையும் எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. ஆனால் அதன் போஷாக்குத் தன்மையோடுள்ள பகுதியைப் பார்க்கும் போது அது ஒப்பீட்டளவில் ஸ்திரமான, நிடித்து நிற்கின்ற இயழ்பைக் கொண்டுள்ளதாகும். தாய்ப்பால் தாயின் இரத்தத்தில் உள்ள போஷாக்குகளைப் பெறுவதோடு, அது அவளது உடலினுள்ளேயே சேமித்து வைக்கப் படுகின்றது. தாய்ப்பால் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் தேவையான கொழுப்பு, சீனி (சர்க்கரை), நீர், புரதம் என்பவற்றைச் சரியான அளவில் உள்ளடக்கியுள்ளது. அது ஒரு நாளைக்கு சராசரியாக 500 களரி (calories) பயன்படுத்தப்படுத்துகின்றது. இது பிரசவத்துக்குப் பின்னர் தாயின் எடையில் குறைவை ஏற்படுத்தவும் துணை நிற்கின்றது. தாய்ப்பாலில் உள்ளடங்கியுள்ள பதார்த்தங்கள் பிள்ளை ஒரு தடவை பால் குடிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் நேரம், பிள்ளையின் வயது என்பவற்றுக்கேற்ப வேறுபட்டமையும். தாய்ப்பாலுடைய தரமும் அவளின் மன அழுத்தம், மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள், நாட்பட்ட, நோய்கள், புகைத்தல், மது அருந்தல் போன்றவற்றால் மாற்றமுறும். ((Denise fisher, "social Drugs and Breast feeding "
தாய்ப்பால் கொண்டுள்ள சிறப்புத் தன்மைகளையும் தாற்பரியங்களையும் சிறுவர் நல விஷேட வைத்தியர் டாக்டர் ஹம்தீ அல்-ஜூன்தீ பின்வருமாறு விளக்குகின்றார்.
1. தாய்ப்பால் நேரடியாக தாயின் மார்ப்பகத்திலிருந்து குழந்தையின் வாய்க்குள் ஊட்டப்படுவதனால் அங்கு பால் மாசுறுவதற்கான வாய்ப்பு இல்லை.
2. பருவகாலங்களுக்கு ஏற்ப தாய்;ப்பாலின் உஷ்னம் மாறுபடும். அது கோடை காலத்தில்; குளிரானதாகவும் மாரிகாலத்தில் சூடானதாகவும் அமைந்திருக்கும்.
3. தாய்ப்பாலில் உள்ளடங்கியுள்ள பதார்த்தங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப வேறுபடும்.
4. குழந்தை பிறந்து ஆரம்ப நாட்களில் வெளிவரும் 'சீம்பால்' வியோதிகளைத் தடுக்கவல்லது. குழந்தையை அது கிருமிகளில் இருந்து பாதுகாப்பதோடு அதன் மூளை வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்களையும் கொண்டது.
5. குழந்தை ஒரு தரம் பால் அருந்தும் போது கூட பால் அருந்த ஆரம்பித்த நேரத்தில் உள்ளதை விட வித்தியாசமான பதார்த்தங்களே இறுதியில் அமைந்திருக்கும்.
6. கிறுமிகளை தடுக்கவல்ல பல்வகையான ஊட்டச் சத்துக்கள் தாய்ப்பாலில் நிரம்பியுள்ளன. தாய்ப்பால் அருந்தும் பிள்ளை மிகக் குறைவாகவே இரைப்பை
7. தாய் கல்சியம் குறைந்த ஒரு பெண்ணாக இருப்பினும் அவளது தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையானளவு கல்சியம் காணப்படும்.
8. தாய்ப்பால் அருந்தும் பிள்ளை பாலோடு தாயின் அன்பு, பாசத்தையும் உள்வாங்கிக் கொள்கின்றது. இதனால் பிள்ளை நல்ல உள ஆரோக்கியத்தைப் பெற்று, உளரீதியான நோய்களிலிருந்தும் பாதுகாப்புப் பெருகின்றது.
9. தாய்ப்பால் அருந்துவது மனித நடத்தைகளிலும் மாற்றத்தைத் தரும். உலகில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரில் சிலரிடம் நடாத்தப்பட்ட ஆய்வில், அவர்களுள் பெரும்பாலானோர். தாய்ப்பால் அருந்தாதோர் எனத் தெரியவந்தது. அதனால்தான் தாய்ப்பால் 'பாலூட்டுவதற்கு முட்டாள் பெண்களை கூலிக்கு அமர்த்த வேண்டாம். ஏனெனில் பால் பாரம்பரிய குணங்களை கடத்தக் கூடியதாகும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் நவின்றுள்ளார்கள்.
வைத்தியர்கள் ஆரம்பகாலங்களில் இயற்கையான பாலூட்டல் பிள்ளை தனது தாயோடு இறுக்கமான உளரீதியான தொடர்பை மாத்திரமே ஏற்படுத்துவதாக நினைத்திருந்தனர். வேறு எந்தப் பயன்பாடும் இல்லை என அவர்கள் கருதினர். ஆனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக செய்யப்ட்ட ஆய்வுகளை தொடர்ந்து தாய்ப்பாலூட்டலினால் ஏற்படும் அதிக பயன்பாடுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அது மாத்திரமின்றி, அறிஞர்கள் ஒவ்வொரு நாளும் தாய்ப்பாலினால் ஏற்படும் புதிய பிரயோசனங்களை கண்டுபிடித்து வருகின்றனர். Immunoglobulins எனப்படும் நோய் எதிர்ப்புக் களங்கள் முதன்முதலில் தாய்ப்பாலில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது பக்டீரியா, வைரஸ் வகைகளை எதிர்த்து நிற்கக் கூடியதாகும். அத்தோடு பசுப்பாலினால் உருவான புட்டிப்பாலை அருந்தி வந்த பிள்ளைகளின் வயிற்றில் தாய்ப்பலை அருந்திய பிள்ளைகளின் வயிற்றில் உள்ளதை விட பத்து மடங்கை விட அதிகமான அளவு பக்டீரியாவின் அளவு இருப்பதாக அறிஞர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  தாய்ப்பாலினால் குழந்தைக்கு ஏற்படும் பயன்கள் 
U.S Agency For Healthcare Research and Quality (AHRQ), World Health Organization (WHO) போன்ற நிருவணங்கள் 2007 இல் மேற்கொண்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் ஊடாக குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுவதன் மூலம் அதிக பயன்கள் ஏற்படுவதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் மிக முக்கியமானதைக் கீழ்வருமாறு சுருக்கித் தருகிறோம்.
o நோய் வராது தடுத்துக் கொள்ளக்கூடிய சிறந்த ஆரோக்கியம்.
தாய்ப்பாலூட்டும் போது கிருமிகளை அழிக்கக் கூடிய பொருட்கள் குழந்தையின் உடலினுள் செலுத்தப் படுகின்றது. தாய்ப்பால் கிருமிகளைப் பரவச் செய்வதைத் தடுக்கக்கூடிய பல்வேறு பதார்த்தங்களை உள்ளடக்கியுள்ளது. உதாரணமாக அமீபிய நுண்ணுயிர்கள் பரவுவதைத் தடுக்கக்கூடிய டிடைந ளயடவ ளவiஅரடயவநன டipயளநஇ குடலில் ஏற்படும் பக்டீரியாவின் வளர்ச்சியைத் தடுத்து, இரும்புச் சத்தை வழங்கக் கூடிய டயஉவழகநசசinஇ மிகச் சிறிய உயிரினங்கிளிலிருந்தும் பாதுகாக்கக் கூடிய iஅஅரழெபடழடிரடin என்பவற்றைக் கூறலாம். (Glass RI,....(1983) "Protection against cholera in breast-fed children by antibodies in breast milk")
o மிகக் குறைவான நோய்த்தாக்கம்.
தாய்ப்பாலூட்டப்பட்ட குழந்தைகள் தாய்ப்பாலூட்டப்படாத குழந்தைகளை விட நோயுடைய தாக்கம் பெறும் வீதம் மிகக் குறைவாக உள்ளது. 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆரம்ப ஏழு மாதங்கள் தாய்ப்பாலூட்டப்பட்ட
பிள்ளைகளுக்கு சிறுநீரக நோய் பரவும் வீதம் மிகக் குறைவாகக் காணப்பட்டது. (Marlid s,....(2004) "protetive effect of breast feeding against urinary tract infection")
o
உயர் நுண்ணரிவு.
தாய்ப்பாலூட்டல் குழந்தைகளின் அறிவு மட்டத்தில் தாக்கம் செலுத்துகின்றதா என மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், குழந்தைகளின் சிந்தனைத் திறன், புத்தி சாதூர்யத்தல் மாற்றத்தை ஏற்படுத்தும். எனக் கூறுகின்றன. WHO 2007 இல் மேற்கொண்ட ஆய்வில் 'தாய்ப் பாலூட்டப்பட்ட பிள்ளைகளின் நுண்ணரிவுப் பரீட்சைகளில் உயர்தரத்தை வெளிப்படுத்தினார்கள்' என்ற முடிவு பெறப்பட்டது.
(Horta BL,...(2007), Evedence on the long-term effects of breast feeding: systematic reviews and meta-analyses, geneva, WHO).
o பிற்பட்ட கால சுகாதார விளைவுகள்.
சிறு குழந்தையாக இருக்கும் போது பாலூட்டிருந்தால் வளர்ந்த பெரியவரானதும் பல விளைவுகள் சாதகமாக அமைந்து விடுகின்றன. தாய்ப்பால் ஆரஉiளெ எனும் ஒருவகை எதிர்ப்புப் பதார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவை அதிக புரதங்களையும் காபோவைதரேற்றுக் களையும் உள்ளடக்கியவையாகும். அவை பக்டீரியாக்களுனும் வைரஸ்களுடனும் ஒட்டிக் கொண்டு, இறுதியில் இரசாயன மருந்துகளுக்கு மாற்றமாக - எந்தவிதமான பக்கவிளைவுகளுமின்றி அவற்றை முற்றாக அழித்து விடுகின்றன.
தாய்ப்பாலூட்டப்பட்ட பிள்ளைகளுக்கு மிகக் குறைவாகவே ஆஸ்த்மா, ஒவ்வாமை (Allergic) நோய்கள் ஏற்படுவதோடு சுவாச நோய்கள், வயிற்று நோய்கள் என்பவற்றுக்கு எதிராகவும் தாய்ப்பால் செயற்படுகின்றது.
(Mead MN (2008) "Contaminants in human milk: weighing the risks against the benefits of breast feeding").
சிறுவயதில் தாய்ப்பாலூட்டப்பட்ட பெண்களுக்கு தாய்ப்பாலூட்டப்படாத பெண்களை விட மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனக் கண்டுபிடித்தது.
(Nichols HB,...(2008) "effects of birth order and maternal age on breast cancer risk: modification by whether women had been breast-fed")
பசுப் பாலில் தாய்பாலில் உள்ளதைவிட இரு மடங்கு புரதம் உண்டு. அதனால் அந்தப் புரதத்தின் அளவை அப்படியே உறிஞ்சி எடுத்து, குழந்தை அதனது உடலில் சேமித்து வைத்துக் கொள்ளமுடியாது. அதன் காரணமாக கொழுப்பதோடு தொடர்பான நோய்கள் எதிர்காலத்தில் தோன்றுகின்றன. அதே நேரம் தாய்ப்பாலில் உள்ள புரதத்தைக் குழந்தை முழுமையாக 100 வீதத்தையும் உறிஞ்சிக் கொள்கின்றது. அதே போன்று அக்குழந்தை தாய்ப்பாலில் இருந்து எடுத்த புரதத்தை சமிபாடடையச் செய்வதற்கு 15 நிமிடங்கள் எடுக்கின்றது. அதே வேளையை பசுப்பாலின் மூலம் செய்வதற்கு 60 நிமிடங்கள் எடுக்கின்றது. எனவே, தாய்ப்பால் நேரத்தையும் சிரமத்தையும் மிச்சப்படுத்துகின்றது .
  தாய்ப்பாலூட்டுவதால் தாய்க்கு ஏற்படும் பயன்கள் 
தாய்ப்பாலூட்டுவதன் மூலம் குழந்தைக்கு மாத்திரமின்றி பாலூட்டும் தாய்க்கும் பல பிரயோசனங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
30 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், தனது மார்பகத்திலுள்ள பாலை ஊட்டும் தாய்மார்கள் குறைவாகவே மார்பகப் புற்றுநோய்க்கு ஆட்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.(Jernstorm, H, "Breast-feeding and the risk of breast cancer in BRCA 1 and BRCA 2 Mutation carriers ")
தாயின் கர்ப்பப்பை மகப்பேறு, பிரசவத்தின் போது 20 மடங்கு விரிவடைகின்றது. இயற்கையான பாலூட்டல் அந்தக் கர்ப்பப்பையை இயல்பான அளவுக்கு மீட்டிக் கொண்டு வந்து விடுகின்றது எனவும் தனது பிள்ளைக்கு தாப்பாலூட்டாத தாயுடைய கர்ப்பப்பை சாதாரண அளவை விட பெரிதாகவே இருக்கும் எனவும் தாயப்பாலூட்டல் கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
தாய்ப்பாலூட்டல் தாயின் எடையைக் குறைப்பதற்கும் கொழுத்தலை விட்டும் காப்பதற்கும் உதவுவதோடு இயற்கையான ஒரு மனநிம்மதியை அது வழங்குகின்றது. அதனால் குழந்தைக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கின்ற அதேவேளை தாயும் நன்கு தூங்குவதற்கு வாய்ப்பேற்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், கூடுதலான காலப்பகுதி பாலூட்டுகின்ற பெண்மணி (ஆகக் குறைந்தது 24 மாதங்கள்) மிகக் குறைவாகவே இருதய நோயால் பாதிக்கப்படுகின்றாள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. (Gunderson, Erica P (2009) "Prospective evidence that lactation protects against cardiovascular disease in women")
அதே போல சர்க்கரை நோய்  உள்ள தாய்மார்கள் பாலூட்டும் போது மிகக் குறைவான இன்சுலின் தேவைப்படுகின்றது. (Rayburn w,...."changes in insulin therapy during pregnancy"). அத்தோடு Malmo University, 2009 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வொன்றில், நீண்ட காலம் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்குக் குறைவாகவே வாதத்தோடு கூடிய முழங்கால் வீக்கம் (Rheumatiod arthrits) ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (Pikwer M,...(2009) "Breast feeding, but not use of oral contraceptives, is associated with a reduced risk of rheumatoid arthritis").
  தாய்ப் பாலூட்டுவதால் ஏற்படும் சமூகப் பயன்கள் 
தாய்ப்பாலூட்டுவதனூடாக அதிகமான நற்பயன்கள் சமூகரீதியாகவும் ஏற்படுகின்றன. இன்று செயற்கைப் பாலூட்டல் போன்று இயற்கைப் பாலூட்டல் வலியுறுத்தப் படுவதில்லை. சிறுவர் வைத்தியத்திற்குரிய அமெரிக்க எகடமி கூறும் கீழ்வரும் தகவல் எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். ஐக்கிய அமெரிக்கா மாத்திரம் இந்த இயற்கையான பாலூட்டலைப் பின்பற்றுமாயின் அது வருடாந்தம் 3600 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீதப்படுத்த முடியும். இதன் மூலம் பெரும் பொருளாதார வளத்தை, பல அபிவிருத்தி திட்டங்களுக்குச் செலவிடலாம்.
தாய்ப்பாலூட்டல் சூழல் பாதுகாப்புக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். புட்டிப் பால் பொதி செய்வதற்காக தகர, கண்ணாடி போத்தல்கள் உற்பத்தி செய்வதனூடாகவும் பசுப்பாலை உலர்த்துவதனூடாகவும் ஏற்படும் சூழல் மாசடைவு புட்டிப்பாலை பாவித்ததன் பின்னர் அதன் தகர, கண்ணாடிக் குவலைகளால் ஏற்படும் பாதிப்பு என்பன சமூக ரீதியாகப் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
வில்லியம் மெக்டோகல் எனும் அறிஞர் கூறும் போது, 'இன்றைய சமூகம் புட்டிப்பாலின் அடிப்படையில் வளர்ந்துள்ளதையே நான் காண்கின்றேன். எனவே வன்முறைகளும் விரக்தியும் உறவுகளில் பூசலும் ஜீவகாருண்ய மின்மையும் வெளிப்படவே செய்யும். குழந்தை பால் குடிக்கும் போத்தலை சட்ட ரீதியாக தடைசெய்யும் போதுதான் இப்பிரச்சினைகள் தீரும்' என்கின்றார்.
  தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி 
தாய்ப்பாலூட்ட வேண்டிய காலப்பகுதி தொடர்பாக சர்வதேச சுகாதார நிறுவனமும் யுனிசெப் நிறுவனமும் பாலருந்தும் குழந்தைகளிடத்தில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவில் அது இரண்டு வருடங்களாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளன. ஏனெனில் குழந்தையின் முதலிரு வருடங்களில் தாய்ப்பாலின் மீது மிக முக்கிய தேவையுடையதாக அது இருக்கும். இரு வருடங்களுக்கு முன்பு அதன் உறுப்புக்களால் தானாக எதிர்த்து நிற்க முடியாது.
உலக சுகாதார நிறுவனம் 2001 ஆம் ஆண்டு "Complementary feeding" என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடாத்தியது. அதன் இறுதியில் பின்வருமாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
"The first two years of a child’s life are a critical window during which the foundations for healthy growth and development are built. Infant and young child feeding is a core dimension of care in this period"
"ஒரு குழந்தையின் வாழ்வில் முதலிரு வருடங்கள் என்பது அதனது ஆரோக்கியமான வளர்ச்சி, விருத்தி கட்டியெழுப்பப்டும் மிக முக்கியமான காலப்பகுதியாகும்.
குழந்தையும் சிறு பிள்ளையினதும் தாய்ப்பாலூட்டல் இக்காலப்பகுpதியில் அடிப்படையாகக் கவனிக்க வேண்டிய அம்சமாகும். "(Complementary feeding, Report of the global consultation, Geneva, 10-13 December,2001)"
அல்-குர்ஆன் சூறதுல் பகரா - 233 ஆம் வசனத்தில் விபரித்துள்ள கருத்துக்களையே மேற்சொன்ன அறிக்கையும் விபரிப்பதைக் காணலாம்.
இந்த வகையில் அல்-குர்ஆன் மிகத் தெளிவாக முன்வைக்கும் தாய்ப் பாலூட்டுவதற்கான கட்டளையை, பிள்ளைக்கான அந்த உரிமையை கட்டாயமாகத் தாய்மார்கள் பின்பற்ற வேண்டும். நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இக்கருத்தை அறிவியல் பூர்வமாகவே நிறுவுகின்றன. எனவே, இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, தாய்மார்கள் செயற்படுவதற்கு தாய்மார்கள் முன்வருவார்களாக.

'பராஅத்''தும் மத்ஹப் நூல்களிலேயே தடுக்கப்பட்டுள்ள ''பித்அத்''துகளும்



நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள், வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது.
அப்படிப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால்காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்,அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர." என்று கூறினார்கள். மக்கள் " அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் " எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்." என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 7280)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்!
"பராஅத் இரவு" என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,
மேலும் "பராஅத் இரவு" என்பதற்கு அரபியில் "லைலத்துல் பராஅத்" என்று கூறப்படும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் "பராஅத் நோன்பு" என்று வைக்கிறீர்களே இதையாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால், காட்ட முடியுமா? நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
இவ்வாறு மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது.
ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்:
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273 )
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் " ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270 )
ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270 )
(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும், ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232 )
பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனஃபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது. பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Saturday, February 25, 2012

இணைகளை எற்ப்படுத்தாதீர்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....

அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும...
உண்டாவதாக..
பாவத்தில் மிகப் பெரும் பாவம் ஈடு இணையற்ற அல்லாஹ்வுக்கு இணை வைப்பதுதான். இறைவன் திருக் கூர் ஆனில் பல இடங்களில் எனக்கு இணைகளை எற்ப்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளான்.அல்லாஹ் கூறுகின்றான். :
2:22 الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ
2:22. அ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.

2:165. அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்; அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது; நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).

3:186. (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து,இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
அல்லாஹ் எச்சரிக்கின்றான் : கீழ்வரும் வசனத்தில்

3:151. விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

4:116. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்.
4:50. (நபியே!) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு (இணையுண்டென்று) பொய்க்கற்பனை செய்கிறார்கள் என்பதை கவனியும்; இதுவே (அவர்களுடைய) பகிரங்கமான பாவத்துக்குப் போதுமா(ன சான்றாக) இருக்கின்றது.
5:82. நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்; “நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.
6:14 قُلْ أَغَيْرَ اللَّهِ أَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَكُونَ أَوَّلَ مَنْ أَسْلَمَ ۖ وَلَا تَكُونَنَّ مِنَ الْمُشْرِكِينَ
6:14. “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக: இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.
6:22. அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.

ஸஹீஹுல் புகாரி 50.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்" என்று கூறினார்கள். அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்'
அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கிற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானார்) அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை, ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்; மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்" என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது." (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்" என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன். Volume :1
Book :2

இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளையும், இறைவனின் திருவசனங்களையும் மதித்து நடந்து உண்மை முஸ்லிம்களாக வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் இன்ஷால்லாஹ் வெற்றி பெறுவோமாக!!!
See More

Wednesday, February 22, 2012

' 'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்



அளவற்ற அருளாளனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....
அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும்  
உண்டாவதாக..
'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள்


இன்றைய நவீன அறிவியலறிஞர்கள் மற்றும் வானியல் வல்லுனர்கள் மேகங்களின் வகைகளைப் பற்றியும்,  அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை சேகரித்துள்ளனர்.  வானியல் வல்லுனர்கள் தகவல்ப்படி, மழை மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான காற்றினாலும், மேகக் கூட்டங்களினாலும் ஓன்று திரட்டப் பட்டு இணைந்து தமக்குரிய வடிவத்தைப் பெறுகின்றன.  மேகங்களின் கூட்டத்தில் ஒரு வகையான மேகமே திரள் கார்முகில்(cumulonimbus cloud) மேகமாகும்.  இந்த திரள் கார்முகில் எனும் மேகம் எங்கனம் உருவாகின்றது?  அவை எவ்வாறு மழை மற்றும் ஆலங்கட்டி (hail) மழையைப் பொழிகின்றது?  மின்னல்கள் எவ்வாறு தோன்றுகின்றன?  போன்ற பல கேள்விகளுக்கான தகவல்களை சேகரித்துள்ளனர்.

கீழ்க்காணும் படிகளின் மூலம் திரள் கார்முகில் மேகங்கள் மழையை உருவாக்குகின்றன:

1.  மேகங்கள் காற்றினால் உந்தப்படுதல்:
சின்ன சின்ன துகள்களாக பிரிந்து கிடக்கும் மேகங்களை காற்று உந்துவதனால்  திரள் கார்முகில் மேகங்கள் உருவாகின்றன.  இந்த சிறிய துகள்களான மேகங்களை நாம் முகிற் கூட்டத்திரள் (cumulus cloud)என்கிறோம்.  

படம் 1. செயற்கைக்கோள் புகைப்படம் மேகங்கள் காற்றினால் B,C மற்றும் D பகுதிகளில் ஒன்று சேருவதைக் காணலாம்.  அம்புக்குறி காற்றின் திசையை குறிக்கிறது.
படம் 2. சிறிய துகள்களான முகிற் கூடத்திறல் மேகங்கள் அதன் இணைப்பு பகுதியான அடிவானத்தின் பக்கம் ஒன்று சேருகின்றன.

2.  இணைதல்:

இச்சிறிய மேகக் கூட்டங்கள் காற்றின் உந்துதலால் ஒன்றோறொன்று இணைந்து பெரிய மேகங்களை அதாவது கார் முகில்திரள் மேகங்களை உருவாக்குகின்றன.
  படம் 3A.  தனித் தனியாக பிரிந்து இருக்கும் முகிற் கூட்டதிரள் மேகங்கள்.  (3B). சிறிய மேகங்கள் ஒன்றிணைவதால் மேல்நோக்கு காற்றின் மின்னோட்டத்தினால் அடுக்காக உயரத் தொடங்குகின்றன. நீர் துளிகள் ' .' என்பதால் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. அடுக்கு வரிசை:

சிறிய மேகக்கூட்டங்கள்(முகிற் கூட்ட திரள்)  ஒன்றோறொன்று இணையும் போது உருவாகும் பெரிய(திரள் கார்முகிற்) மேகங்களினுள் மேல் நோக்கிய காற்று மின்னோட்டம்(updraft) அதிகரிக்கின்றது.  இத்திரள் கார்முகில் மேகத்தின் மையப் பகுதியில் மற்ற ஓரப் பகுதிகளை விட காற்றின் மின்னோட்டம் வலிமையானதாக இருக்கும்.  இந்த மேல் நோக்கு காற்று மின்னோட்டத்தின் காரணமாக மேகப் பகுதிகள் செங்குத்தாக உயரத் தொடங்குகிறது.  (பார்க்க படம்: 3B, 4&5).  இம்மேகங்கள் செங்குத்தாக உயருவதினால் மேகத்தின் உடல் இழுக்கப் பட்டு வளிமண்டலத்தில் பரந்து குளிர்வான பகுதியை தோற்றுவிக்கும்.  ஆதலால் இம்மேகங்களிலுள் நீர்த் துளிகளும் மற்றும் ஆலங்கட்டிகளும் உருவாகிப் பின் அவைகள் இன்னும் அதிக அதிகமாக கூடத் தொடங்குகின்றன.  எப்போது இந்த நீர்த் துளிகளும், ஆலங்கட்டிகளும் மேகத்தில் அதிகரித்து அதன் உச்சநிலையை தொடுகின்றதோ காற்றின் மின்னோட்டத்தின் உதவியால் மழை மற்றும் ஆலங்கடிகளாய் பொழிகின்றது.  

 படம் 4. திரள்கார்முகில்  மேகம். அவை அடுக்குகளாய் உயர்ந்து பின் மழை பொழியத் தொடங்குகின்றது.

அல்லாஹ்(swt) தனது திருக் குர்ஆனில் கூறுகிறான்:

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்;  (அல்-குர்ஆன்: 24:43)

இன்று வானியல் வல்லுனர்கள் செயற்கைக்கோள், கணிப்பொறி உள்ளிட்ட பல நவீன உபகரணங்களை பயன்படுத்தி மேகங்களின் வடிவத்தையும், அவை இணைவதைப் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் இத்தகைய தகவலைப் பெற்றுள்ளனர். மேலும் காற்றின் திசை, ஈரத்தன்மை மற்றும் காற்றழுத்தம் அவைகளின் வேறுபாடுகளை அறிய பல நவீன கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.  இவ்வாறு சேகரிக்கப்பட்ட உண்மையான தகவலைத் தான் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட இறை வேதமான திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியிருக்கின்றான்.  அதே வசனத்தில் இறைவன் கூறுகின்றான்:

இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.  (அல்-குர்ஆன்: 24:43)   

பனிக்கட்டி மழை பொழியும் திரள் கார் முகில் மேகங்கள் சுமார் 25,000 அடி முதல் 30,000 அடிவரை (4.7 to 5.7 மைல்கள்) உயரம் வரை உயர்ந்த மலைகளைப் போன்று வளரக்கூடியது என்று வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  அல்லாஹ்(SWT) இதைத்தான் குர் ஆனில் 'வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து' என்று கூறுகின்றான்.

    படம் 5. மலை போன்று உயர்ந்து நிற்கும் திரள் கார் மேகம்(cumulonimbus cloud).

பொருளடர்ந்த இவ்வசனத்தில் அல்லாஹ்(SWT) 'மின்னொளி' அதாவது மின்னல் பற்றி கூறியிருக்கின்றான்.  ஆலங்கட்டி மழையுடன் மின்னலை ஏன் சம்பந்தபடுத்தினான்? மின்னல்கள் உருவாக ஆலங்கட்டி ஒரு முக்கிய காரணியாக இருக்குமோ? என்றெல்லாம் கேள்விகள் எழலாம்.  மேகங்களில் உள்ள பனிக்கட்டிகள் மேகத்தின் அதிக குளிர்ச்சியான நீர்த்துளிகள் மற்றும் பனிப் படிகங்களின் வழியாக கீழே விழும்போது மேகங்கள் மின்னூட்டம்  பெறுகின்றன என்று 'இன்றைய வானிலை' என்ற புத்தகம் மின்னலைப் பற்றி கூறுகின்றது.

மேகங்களினுள் இருக்கும் திரவ நீர்த்துளிகள் பனிக்கட்டிவுடன் மோதும் போது, அவை உறைந்து உள்ளுறை வெப்பத்தினை(Latent Heat) வெளிப்படுத்துகிறது.  இதனால் பனிக்கட்டியின் வெளிப்புறம் சுற்றியிருக்கும் பனிப்படிகங்களைக் காட்டிலும் வெதுவெதுப்பாக இருக்கும்.  எப்பொழுது இந்த வெதுவெதுப்பான பனிக்கட்டிகள் சுற்றியுள்ள பனிப்படிகங்களைக் தொடுகின்றதோ அப்பொழுதுதான் முக்கியமான மின்னியல் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

படம் 6.  மின்னல்

குளிர்சியானப் பனிப்படிகங்களிலிருந்து வெதுவெதுப்பான பனிக் கட்டியின் இலக்கிற்கு எலெக்ட்ரான் பாய்ச்சல் நிகழ்கின்றது.  இதனால் பனிக்கட்டி எதிர் மின்னோட்டம் பெறுகின்றது.  இதைப்போன்ற நிகழ்வுதான் அதிக குளிர்ச்சியான நீர்த் துளிகள் பனிக்க்கட்டியுடன் மோதும் போதும் நிகழ்கின்றன.  இதனால் குளிர்ச்சியான நீர்த்துளிகள் நேர் மின்னோட்டம் பெற்று சிறிய பனித் துளிகளாகப் பிரிந்து விடுகின்றது.  குறைவான எடை கொண்ட இந்த சிறிய நேர் மின்னோட்டம் காற்றின் மேல் நோக்கு விசையால் மேகத்தின் மேல் பகுதிக்கு எடுத்துசெல்லப் படுகிறது.  இறுதியாக பனிக்கட்டி எதிர் மின்னோட்டம் பெற்று மேகத்தின் கீழ் பகுதியில் தங்கிவிடுகிறது.  எனவே மேகத்தின் கீழ் பகுதி எதிர் மின்னோட்டம் பெறுகின்றது.  இந்த எதிர் மின்னோட்டம் மேகத்திலிருந்து மின்னலை வெளிப்படுத்துகின்றது.  இவற்றிலிருந்து பனிக்கட்டிகள் மின்னல் தோன்ற ஒரு முக்கிய காரணியாக இருப்பதாக நாம் தீர்மானிக்கலாம்.

அல்லாஹ்(SWT) இவ்வாறாக தனது வசனத்தில் மழையைப் பற்றியும், பனிக்கட்டிகளைப் பற்றியும் மற்றும் மின்னல்களைப் பற்றியும் விவரிக்கின்றான்.  இறைவன் கூறும் இவ்வசனங்களின் விளக்கங்களை இன்றைய நவீன அறிவியலின் உதவிகொண்டு நாம் அறிகின்றோம்.  இத்தகைய பல்வேறு அறிவியல் நுட்பங்களை தன்னுள் கொண்டிருக்கின்ற அருள் மறை திருக்குர்ஆன்  ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனிடமிருந்துதான் இறக்கப்பட்டது என்பதை நிச்சயமாக கூறமுடியும். 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறுவது போன்று நுட்பங்களைக் எந்த மனிதனாலும் கூறியிருக்க முடியாது என்பது உறுதியாகிறது.  ஆகவே வணக்கத்துக்குரியவன்  அல்லாஹ் ஒருவனே! அவனிடமிருந்து முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மூலம் இவ்வுலகிற்கு அளிக்கப் பட்ட அருட்கொடையே கண்ணியமிக்க திருக்குர்ஆன் என்று நான் சாட்சி கூறுகிறேன்.

Friday, January 27, 2012

வெள்ளிக்கிழமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு





 
بسم الله الرحمن الرحيم
ஏக இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அவனது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
மனிதர்கள் தங்களின் திருநாட்கள் மீண்டும் மீண்டும் வருவதிலும், அதை கொண்டாடுவதிலும், அந்த நாட்களை நினைவு கூர்வதிலும் சந்தோஷமடைகின்றனர். அதே போன்று தான் இஸ்லாமிய சமூகத்துக்கு அல்லாஹ்வை வணங்கக்கூடிய திருநாளாக வெள்ளிக்கிழமைதினம் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகின்ற பொழுது, “சூரியன் உதிக்கக்கூடிய நாளிலே சிறந்த நாள் வெள்ளிக்கிழமை நாளாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)
புனிதம் மிக்க இந்த நாளை சிலர் தூக்கத்திலும், பிரயாணத்திலும், விளையாட்டிலும் கழிப்பதோடு பெண்கள் கடைத்தெருக்களிலும், வீடு வாசல் சுத்தம் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். இந்த நாளின் மகத்துவத்தையும், சிறப்பையும் அறியாதவர்களாக கவனமின்மையாக இருக்கின்றார்கள். இவற்றை விட்டுவிட்டு இந்த நாளின் சிறப்பையும், நன்மையையும், மகத்துவத்தையும் அறிந்து இறைவனை வழிபடுவதிலும், அதிகம் திக்ர் செய்வதிலும் அதிகமதிகம் பிரார்திப்பதிலும் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதிலும் ஈடுபட முயல வேண்டும்.

அந்த நாளில் செய்யக்கூடிய நற்செயல்களின் சிறப்பு: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்”(அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)


1) மாறி மாறி வரக்கூடிய திருநாள்: வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.
2) நன்மைகள் அதிகமாக உள்ள நாள்: சுவர்க்கத்தில் இருக்கின்ற இறைவிசுவாசிகளை (முஃமின்களை) இத்தினத்தில் இறைவன் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான்: “அவர்கள் விரும்புவது அதில் அவர்களுக்கிருக்கிறது. மேலும் (அதைவிட) அதிகமானதும் நம்மிடம் இருக்கிறது” அனஸ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் “ஒவ்வொரு வெள்ளியன்றும் இறைவன் அவ்ர்களை (முஃமின்களை) பார்வையிடுகின்றான்” (ஆதாரம்: இப்னு பத்தா, அபூ நயீம்)
5) அந்த நாளில் செய்யக்கூடிய நற்செயல்களின் சிறப்பு: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜந்து நற்செயல்களை அந்த நாளில் செய்கின்றாரோ அவரை அல்லாஹ் சுவர்க்கவாசி என்று கருதுகின்றான். நோயாளியை விசாரிப்பது, ஜனாஸாவில் கலந்து கொள்வது, வெள்ளியன்று நோன்பு நோற்பது, ஜும்-ஆவுக்கு செல்வது, ஒரு அடிமையை விடுதலை செய்வது போன்றனவாகும்”(அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா: இலக்கம் 1033)

பாவங்கள் மன்னிக்கப்படும் நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“எவரொருவர் வெள்ளிக்கிழமை தினத்தில் குழித்து சுத்தம் செய்துகொண்டு, தலையில் எண்ணை தெய்த்து,வாசனை திரவியங்களை தடவிக்கொண்டு பின்னர் பிரரை கடந்து செல்லாமல் பள்ளியினுல் நுழைந்து தனக்கு கடமையான தொழுகையை தொழுகின்றாரோ அவரது இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்” (ஆதாரம்:புகாரி)

ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிப்பவரது மரணம் நல்ல மரணத்தின் அடையாளங்களில் நின்றும் ஒன்றாகும்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எவரொருவர் ஜும்ஆ தினத்தில் அல்லது அன்று இரவில் மரணிக்கின்றாரோ அவர் மண்ணறை வேதனையை விட்டும் காப்பாற்றப்டும்”(ஆதாரம்: அஹ்மத்)
11) இத்தினத்தில் தர்மம் செய்வது ஏனய நாற்களில் தர்மம் செய்வதனை விடவும் சிறந்ததாகும்: இமாம் இப்னு கையும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:“ரமலான் மாதத்தில் தர்மம் செய்வது எவ்வாறு ஏனைய மாதங்களில் தர்மம் செய்வதை விடவும் சிறபானதோ அதே போன்று வெள்ளிக்கிழமையன்று தர்மம் செய்வது ஏனைய நாட்களில் தர்மம் செய்வதைவிடவும் சிறந்ததாகும்” இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் வெள்ளியன்று பள்ளிவாசலுக்கு செல்லும் போது ரொட்டி அல்லது வேறு ஏதாவது உணவு பண்டங்களை கொண்டு சென்று இரகசியமாக தர்மம் செய்வார்கள்.

ஜும்-ஆ தொழுகை முடிந்து விட்டால் தொழுகைக்கு பின்னால் ஓதக்கூடிய துஆக்களை ஓத வேண்டும்; பின்னர் பள்ளிவாசலில் 4 ரக்அத்துக்கள் சுன்னத்து தொழுது கொள்ளவேண்டும். வீட்டில் தொழக்கூடியவராக இருந்தால் பள்ளிவாசலில் இரண்டும், வீட்டில் இரண்டும் தொழுது கொள்ளவேண்டும்.
சகோதரர்களே! இத்தினத்தின் சிறப்புக்களையும் நபியவர்களின் வழிமுறைகளையும் இத்தினத்தில் நடந்து கொள்ளவேன்டிய ஒழுங்குமுறைகளையும் அறிந்த நாம், இதனது முழுமையான சிறப்பையும் நன்மையையும் அடைய இறைவன் அருள் புரிவானாக! இறைவனிடத்தில் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அந்த நேரத்தை அடைவதற்கு இறைவன் அருள் புரிவானாக!
நாம் அனைவரும் இறைவனை அஞ்சவேண்டிய முறைப்படி அஞ்சி அவனை மாத்திரமே வணங்குவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!