அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு....
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஹஜ்ரத்(அலி), பாத்திமா(ரலி) அவர்களின் இல்வாழ்க்கை ஆரம்பம் முதல் இறுதி வரை வறுமையின் கொடும்பிடியில் சிக்கி இருந்தது. எந்த அளவிற்கு எனில் புழங்குவதற்கு பாத்திரங்கள் இல்லை. சமைப்பதற்கு தானிய மணிகளோ இதர பொருள்களோ இல்லை. உடுத்துவதற்கு கந்தலாடைகளைத் தவிர்த்து வேறில்லை. படுத்து உறங்குவதற்கு சரியான பாய் இல்லை. கடுங்குளிரில் போர்த்தி கொள்ள போதுமான போர்வை இல்லை.
இவ்வாழ்வை கண்டு அவர்கள் அஞ்சவுமில்லை. கலங்கவும் இல்லை. அந்த அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் அருமை மகளாருக்கு அற்ப்புதமான பயிற்ச்சியை அளித்திருந்தார்கள்.
துவக்கத்தில் ஹஜ்ரத்(அலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களிட்ட பணிகளை சிரமேற்க்கொண்டு செய்து வந்தமையால் தமக்கென எந்த தொழிலையும் அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
இதனால் மணவாழ்க்கை துவங்கிய பொழுது வறுமை அவர்களை வாட்டியது. எனினும் அவர்கள் புல் அறுத்துக் கொண்டு வந்து அதனை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தாமும் உண்டு , தம்முடைய தாய் மனைவி ஆகியோருக்கும் உணவளித்தனர். ஆனால் ஒரு வேளை கூட வயிறார அவர்களில் எவரும் உண்டதில்லை.
பாத்திமா (ரலி) அவர்கள் மணப்பெண்ணாய் ஹஜ்ரத்(அலி) அவர்களின் இல்லத்தில் நுழைந்த பொழுது அங்கு ஓர் ஆட்டின் தோலைத் தவிர்த்து வேறெதுவும் இருக்கவில்லை. படுத்துறங்குவதர்க்கு பாய் இன்மையால் அதையே பாயாக பயன்படுத்திக் கொண்டனர் புது மனத் தம்பதிகள்.
அலி(ரலி) அவர்களிடம் ஒரு போர்வை இருந்தது. அது எப்படிப்பட்டதெனில் அதனைக் கொண்டு தலையை மூடினால் கால் வெளியில் தெரியும். காலை மூடினால் தலை வெளியில் தெரியும். ஒரு சில வேளைகளில் போரில் சிறைபோருட்கள் அலி(ரலி) அவர்களுக்கு கிடைக்கும். அப்பொழுது அதன் மூலம் குடும்பம் நடக்கும். பின்னர் பழைய நிலைக்கே திரும்பி விடும்.
தாங்க இயலாத பசி:
வீட்டில் உண்பதற்கு ஏதும் இன்மையால் அலி(ரலி) அவர்கள் மிகவும் வேதனைப் பட்டார்கள். அவர்களுக்கோ அகோர பசி . என்ன செய்வது? என்று வெளியில் புறப்பட்டார்கள். அதன் பிறகு நடந்தை அவர்களே கூறுவதைக் கேட்போம்.
ஹஜ்ரத்(அலி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நாள் குளிர் காலத்தில் நான் வீட்டை விட்டு வெளியில் புறப்பட்டுச் சென்றேன். அப்பொழுது எனக்கோ அகோரப் பசி. உண்பதர்ற்கு ஏதும் கிடைக்காத என்று பார்த்தேன். அப்பொழுது ஒரு யூதன் தன் தோட்டத்திற்க்கு வாளியின் மூலம் நீர் இறைத்து கொண்டிருந்தான். சுவரின் ஒரு துளை வழியாக நான் அவனை பார்த்த பொழுது அவன், அரபியே! உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டான்.
பின்னர் ஒரு வாளிக்கு ஒரு பேரிச்சம்பழம் என்று கணக்கிட்டு தண்ணீர் இறைத்துத் தருவீரா? என்று கேட்டான். நான் உடனே சரி, சரி, கதவைத் திற. நான் உள்ளே வருகிறேன் என்றேன்.
அவன் கதவைத் திறந்து விட நான் உள்ளே நுழைந்தேன். அப்பொழுது என்னிடம் ஒரு வாளியை அவன் தந்தான். நான் அதனை வாங்கி ஒரு வாளி தண்ணீர் இறைத்தேன்.. அவன் உடனே ஒரு பேரிச்சம்பழம் தந்தான். இவ்விதமாக நான் தண்ணீர் இறைக்க இறைக்க அவன் பேரிச்சம்பழம் தந்து கொண்டே இருந்தான். நானும் கைப்பிடி அளவு பேரிச்சம்பழம் கிடைக்கும் வரை நீரை இறைத்துவிட்டு பின்னர் வாளியை அவனிடம் கொடுத்துவிட்டேன். பேரிச்சம்பழங்களைத் தின்று தண்ணீர் குடித்துவிட்டு பள்ளிக்குச் சென்றேன்.
நோயும், நேர்ச்சையும், நோன்பும் :
ஒஎஉ சமயம் பாத்திமா (ரலி) அவர்கள் பிள்ளைகள் இருவருக்கும் கடுமையான நோய் ஏற்ப்பட்டது. பிள்ளைகள் நலம் பெற்றுவிடின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து நோன்பு நோர்ப்பதாக இருவரும் நேர்ச்சை செய்து கொண்டனர். இறையருளால் பிள்ளைகள் நோய் நீங்கி நலம் பெற்று விட்டனர். அதனால் நோன்பு நோற்கத் தொடங்கினர்.
சகர் செய்யவும் உணவு இல்லை. நோன்பு திறக்கவும் உணவு இல்லை. முதல் நாள் காலையில் அலி(ரலி) அவர்கள் ஒரு யூதனிடம் சென்றார்கள். ஒரு பஞ்சு கொடுத்தால் அதை கூலிக்கு நூலாக நூற்றுக் கொண்டு வந்து தருவேன் என்று அவனிடம் கூறினார்கள். அது கேட்டு அவன் அவர்களுக்கு ஒரு பஞ்சு மூட்டையைக் கொடுத்து அதை நூலாக நூற்றுக் கொண்டு வந்தால் அதற்க்கு கூலியாக மூன்று மரக்கால் சோளம் தருவேன் என்று கூறினான்.
பாத்திமா(ரலி) அவர்கள் பஞ்சிலிருந்து நூல் நூற்றார்கள். யூதன் முன்னர் கூறியது போலவே அதற்க்கு சோளம் கொடுத்தான்.
அவர்கள் அதனை மாவாக அரைத்தார்கள். பின்னர் அம்மாவைக் கொண்டு தமக்கும், கணவருக்கும், பிள்ளைகளுக்கும், அடிமைப் பெண்ணுக்கும் ஆக ஐந்து
ரொட்டிகள் சுட்டனர்.
மாலை வந்தது. அலி(ரலி) அவர்கள் மக்ரிப் தொழுகையை நபி(ஸல்) அவர்களுடன் பள்ளியில் தொழுத பின்னர் வீட்டிற்கு வந்தனர். நோன்பு திறந்த பின் சாப்பிட ரொட்டிகள் தயாராக இருந்தன. உண்ணப் போகும் நேரம்!
முஹம்மது(ஸல்) அவர்களின் குடும்பத்தினரே! நான் ஓர் ஏழை. எனக்கு உண்பதர்ற்கு ஏதேனும் தாருங்கள். அல்லாஹ் சுவனத்தில் உங்களுக்கு மேலான உணவைத் தருவான் என்று ஒரு பிச்சைக்காரர் கூறினார். அனைவரும் உண்ணுவதை நிறுத்திவிட்டு அலி(ரலி) அவர்கள் மனைவி பாத்திமாவிடம் என்ன செய்யலாம் என்று வினவிய பொழுது ரொட்டிகள் அனைத்தையும் ஒரு சேர அந்த வறியவரிடம் கொடுத்து விடலாம் அவர்கள் கூறினார். அவ்வாறே அலி(ரலி) அவர்கள் செய்து விட்டு அனைவரும் பட்டினி கிடந்தனர்.
இரண்டாம் நாளும் அவ்வாறே நடந்தது..மூன்றாம் நாளும் அது போன்றே பஞ்சிலிருந்து நூல் நூற்று ரொட்டிகளை சுட்டு வைத்திருந்தனர். வாயிலில் ஒரு கைதியோருவன் வந்து நின்று வறிய நிலையைக் கூறி உணவு கேட்டான். அனைத்தையும் கொடுத்துவிட்டு நோன்பு திறந்தனர். நேர்ச்சை செய்ததற்காக செவ்வனே நோன்பு நோற்று இருவரும் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை குறைவின்றி ஆற்றினர்.
நான்காம் நாளும் வந்தது. யாரும் நோன்பில்லை. ஆனால் உண்பதர்ற்கு உணவில்லை. அலி(ரலி) அவர்கள் தம் இரு செல்வங்களையும் அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அவர்களால் நடக்கவும் இயலவில்லை. அவர்களின் நிலை கண்டு நபி(ஸல்) அவர்கள் மிகவும் வேதனைப் பட்டார்கள்.
உங்களைப் பார்க்க எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. வாருங்கள் பாத்திமா(ரலி) அவர்களிடம் என்று கூறிய நபியவர்கள் , மகளாரின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்பொழுது பாத்திமா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். பசி பட்டினியின் காரணத்தினால் அவர்களின் கண்கள் குழி விழுந்தனவாக காணப்பட்டன. கண்கள் கலங்கிய நிலையில் தம் மகளாரை ஆரத் தழுவிய தந்தையார் மகளின் நல்வாழ்வுக்காக அல்லாஹ்விடம் துவாச் செய்தார்கள்.
அப்பொழுது வானவர் கோமான் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறை வசனத்தை ஏந்தியவர்களாக அண்ணலாரிடம் வந்தார்கள். அப்பொழுதுதான்,
"வாயுத் இமூனத் த ஆம அலா ஹுப்பிஹி மிஸ்கீணன் வ யத்தீமன் வ அசீரா"
-(அன்றி அல்லாஹ்வின்மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் ஆகரமளித்து வந்தனர்.) என்னும் 76 :8 இறைவசனம் இறங்கியது. இது ஹஜ்ரத் அலி (ரலி), ஹஜ்ரத் பாத்திமா(ரலி) ஆஹியோரை சிறப்பிப்பதற்காக அல்லாஹ் இறக்கிய திருவசனமாகும். என்று ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஆதாரம் நூல் புகாரி, முஸ்லிம்.
இதனை துர்ருல் மன்தூர் என்னும் கிரந்தத்திலும் அல்லாமா சுயூத்தி (ரஹ்) அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.