உங்களில் ஒருவர் வனாந்தரத்தில் தனது ஒட்டகத்தை தவறவிட்ட பிறகு திடீரென அது கிடைக்கப்பெற்ற நிலையில் அவர் அடைகின்ற மகிழ்ச்சியை விட அதிகமாக அல்லாஹ், தனது அடியான் பாவமன்னிப்புத் தேடும் போது மகிழ்ச்சி அடைகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
33:73. எனவே, (இவ்வமானிதத்தை மாறு செய்யும்) முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும்; முஷ்ரிக்கான ஆண்களையும், முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று) மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
40:3. பாவத்தை மன்னிப்பவனும், தவ்பாவை - மன்னிப்புக் கேட்பதை - அங்கீகரிப்பவனும், தண்டிப்பதில் கடுமையானவனும், தயை மிக்கவனும் ஆவான், அவனைத் தவிர நாயன் இல்லை; அவனிடமே (யாவரும்) மீள வேண்டியதிருக்கிறது.
42:25. அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக் கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்
Asalamu Alaikkum Sister....
ReplyDeleteMasha Allah ungal posts ellam nalla irukku
thodrnthu neriya haddis post pannunga...
Wa Alaikum salam warahmathullahi wa barakathuhu brthr... inshallah kandippaga.. jazakallah hairen
ReplyDelete