Tuesday, December 27, 2011

வித்ரு தொழுகையில் ஓதும் குனூத் சம்பந்தமாக.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு...

 
தொழுகைக்கு வெளியே துஆச் செய்யும்போது நபி (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்திப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது அவர்களுடைய அக்குள்களின் வெண்மை காணப்படும் அளவிற்கு தம் கைகளை உயர்தினார்கள். அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி) (நூல்கள் - புகாரி 1031, 6341. முஸ்லிம் 1630, 1631)

நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹும்ம இன்னீ அவூதுபிக பிரிளாக மின் ஸகதிக வ அவூது பிம்ஆஃபாதிக மின் உகூபதிக வ அவூதுபிக மின்க லா உஹ்ஸீ ஃதனாஅன் அலைக அன்த கமா அஃத்னைத்த அலா நஃப்ஸிக'' என்று தமது வித்ரில் ஓதுவார்கள். அறிவிப்பவர் அலி பின் அபீதாலிப் (ரலி) (நூல்கள் - திர்மிதீ 3566, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா

(பொருள்:- இறைவா! உன் பொருத்தத்தின் துணையுடன் உன் கோபத்தை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்! உனது துணை கொண்டு உனது வேதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்! உன்னை முழுமையாகப் புகழ நான் இயல மாட்டேன்! உன்னை நீ எவ்வாறு புகழ்கிறாயோ அவ்வாறே நீ இருக்கிறாய்!)
வித்ரில் நான் ஓதுவதற்காக (பின் வரும்) வாசகங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். ''அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹைதைத, வஆஃபினீ ஃபீமன் ஆஃபைத, வதவல்லனீ ஃபீமன் தவல்லைத, வபாரிக்லீ ஃபீமா அஃதைத, வகினீ ஷர்ர மாகளைத ஃபஇன்னக தக்ஃதீ வலாயுக்ளா அலைக. வஇன்னஹு லாயதில்லு மன் வாலைத, தபாரக்த ரப்பனா வதஆலைத'' அறிவிப்பவர் ஹஸன் இப்னு அலி (ரலி) நூல்கள் - திர்மிதீ 464, நஸயீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா, தாரிமீ)
(பொருள்:- இறைவா! நீ யாருக்கு நேர்வழி காட்டினாயோ அவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு நற்சுகம் வழங்பினாயோ அவர்களுடன் எனக்கும் நற்சுகம் வழங்குவாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் என்னையும் பொறுப்பேற்றுக் கொள்வாயாக! நீ எனக்கு வழங்கியவற்றில் அபிவிருத்திச் செய்வாயாக! நீ விதித்த தீங்குகளிலிருந்து என்னைக் காப்பாயாக! எதையும் விதிப்பவன் நீயே! எவரும் உனக்கு (எதையும்) விதிக்க முடியாது! நீ பொறுப்பேற்றுக்கொண்ட எவரும் இழிநிலை அடைவதில்லை! இறைவா! உன் அருள் விசாலமானது! நீ உயர்வானவன்!)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.